Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை CMP வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சி.எம்.பி வாய்கால் தூர்வாரப்பட்டது. இதையடுத்து அதிரை குளங்களுக்கு சி.எம்.பி வாய்கால் வழியாக தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை சிஸ்யா மற்றும் சிஸ்வாவின் அறிவுறுத்தலின் படி சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபூபக்கர் தலைமையில் SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், பொருளாளர் ஷேக் அலி, சங்க உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ரேவதி ஆகியோரை சந்திது கோரிக்கை மனுவை அளித்தனர்.