அதிரையில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர்

அதிரையில்   பகுதியில்   உள்ள   புயல்   பாதுகாப்பு   கட்டிடங்களை   கலெக்டர்   சுப்பையன்   ஆய்வு   செய்தார்.  வங்கக்கடலில்   உருவான   காற்றழுத்த தாழ்வு   மண்டலம்   நாகை   பகுதியை   நோக்கி    கரையை   கடக்கக்கூடும்   என்று   வானிலை   மையம்   எச்சரித்துள்ளது.   

இதன்பேரில்   தஞ்சை   மாவட்டத்தில்   உள்ள   கடலோர   பகுதியில்   உள்ள   அதிரை,   ஏரிப்புறக்கரை,   கொள்ளுக்காடு   மற்றும்   கடற்கரை   பகுதியில்     உள்ள   புயல்   பாதுகாப்பு   கட்டிடங்களை    கலெக்டர்   சுப்பையன்   நேற்று    ஆய்வு    செய்தார்.    அப்போது   தண்ணீர்    வசதி,   மின்சார   வசதி,   கழிப்பிட வசதிகள்   உள்ளதா   என்று   ஆய்வு   செய்தார். 

டிஆர்ஓ சுரேஷ்குமார்,   ஆர்டிஓ முருகேசன்,   தாசில்தார் பாஸ்கரன்,   ஆர்ஐ கார்த்திகேயன்,   விஏஓ விஸ்வலிங்கம்   உடனிருந்தனர்.

Close