ரியாத்தில் கொட்டித் தீர்க்கும் கன மழை (புகைப்படங்கள் மற்றும் வீடியோ)

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாகானத்தில் இடியுடன் கூடிய கன மழை நேற்று மக்ரிபுக்கு பிறகு தூரலாக துவங்கியது தற்பொழுது கன மழையாய்கொட்டித்தீர்த்து வருகிறது. 

இதனால் ரியாத் பகுதியே வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ளது. இதனால் ரியாத் பகுதி சவூதி அரேபியாவின் பிற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் ரியாத்தின் முக்கிய பகுதிகளான அர்-ரவ்தா,தரீக், குரைஷ் ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ரியாத் அல்லாத பிற பகுதிகளான அல் – கசீம், புரைதா, ஹைல் ஆகிய சவூதியின் பிற பகுதிகளிலும் மழை கடுமையாக பெய்து வருகிறது.

1384631939716602500.jpg




சவூதியிலேயே அதிரையர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இதில் பெய்து வரும் இந்த கன மழையால் ரியாத் வாழ் அதிரை வாசிகளும் சிரமத்திர்க்குள்ளாகி உள்ளனர். 

இந்த மழைக்கு பிறகு மூன்று மாதம் குளிர் நீடிக்குமாம்.

Close