Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே சாலை விபத்து… 2 பேர் படுகாயம்..!

பட்டுக்கோட்டை – அதிரை சாலையில் அமைந்திருக்கும் சேண்டாக்கோட்டை பள்ளிக்கொண்டான் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதினர். இதில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.