Adirai pirai
#DENGUE articles FLASH NEWS உள்ளூர் செய்திகள்

ஊரை அசுத்தப்படுத்தும் அதிரை வாசிகள்.!

ஊரை அசுத்தப்படுத்தும் அதிரை வாசிகள்.!

அதிரையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தலால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

அசுத்தம் நிறைந்த சுற்றுப்புறச் சூழலே இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பேரூராட்சியின் அலட்சியம் ஒரு புறம் இருந்த போதிலும் தற்போது அவர்களின் செயல் சற்று அதிகரித்து தினமும் டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாள்தோறும் குப்பைகளை அகற்றுவது, கொசு மருந்து அடிப்பது, வீடு வீடாக சென்று காய்ச்சல் இருப்பவர்கள் விபரம் அவர்களின் வீட்டின் சுற்றுப்புறம் சுற்றம் பற்றிய ஆய்வு மேற்கொள்வது போன்ற நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது பேரூராட்சி.

மக்களிடம் டெங்கு பரவுவதன் காரணம் என்னவென்று கேட்டால் பேரூராட்சி நிர்வாகம் சரியில்லை என்று கூறுகின்றனர். யார் என்ன குற்றம் செய்தாலும் அனைத்தும் பேரூர் நிர்வாகம் மீதே திணிக்கப் படுகின்றது.

2 வாரங்களுக்கு முன் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக 21வது வார்டு பகுதிகளில் குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது. இது அரசு பணமல்ல ஊரை சுத்தமாக வைத்திருக்க நல் உள்ளம் கொண்டவர்களால் வழங்கப்பட்டது. இந்த பகுதியை போன்று அதிரையில் இன்னும் பல பகுதிகள் உள்ளது.

இந்த குப்பை கூண்டு வைத்த பிறகாவது அசுத்தம் குறையும் என்று நம்பினோம். ஒரு சில பொதுமக்கள் தங்களின் வேலையை மீண்டும் காட்ட ஆரம்பித்து விட்டனர். குப்பைகளை கூண்டுக்குள் கொட்டாமல் கூண்டுக்கு வெளியில் வீசி எரிவது.

இது போன்ற தப்புகளை செய்வதுடன் சுகாதார சீர்கேடு என்று வந்து விட்டால் பேரூர் தான் காரணம் என்று கொடி பிடிக்கின்றனர். பொதுமக்கள் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் பேரூர் எப்படி காரணமாகும். அவர்களும் ஒரு சில விஷயங்களில் தவறுகள் செய்திருக்கிறனர். அதற்காக எது தடந்தாலும் பேரூர் நிர்வாகத்தின் மீது குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

நம் பகுதியை சுற்றமாக வைத்திருப்பது நம் கடமை இதனால் பாதிக்கப்படுவது நம்மவர்கள் தான் என்பதனை அசுத்தம் செய்யும் முன் உணர்ந்து கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் அசுத்தமான சுற்றுச்சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இந்த பதிவு அசுத்தம் செய்யும் மக்களுக்கு மட்டுமே.

படங்கள் : அபூபக்கர்