விச்சித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கூத்தாநல்லூர் சகோதரர்கள்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுரை சேர்ந்த சகோரர்கள் ஹாரிஸ் (26), ரிஜால்(19). இவர்களுக்கு தந்தை இல்லை. இவர்கள் தாயார் மிகுந்த சிரமத்துடன் இவர்களை வளர்த்து வந்துள்ளார். சிறுவயதில் இருந்து எந்த குறைபாடும் இல்லாமல் சாதாரண மனிதர்கள் போல் இருந்த இவர்களின் நடவடிக்கை ஒரே நேரத்தில் மாற்றமடைய தொடங்கியது. தொடக்கத்தில் இவர்களின் கண்பார்வையில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பேசுவது, நடப்பது அனைத்திலும் வேகம் குறைந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் இருவரும், வில்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு கல்லீரல் செயலிழந்துள்ளது.

இவர்கள் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சிகிச்சைக்கு ₹33 லட்சம் தேவைப்படுவதால் நமது உதவியை நாடியுள்ளனர்.

விபரங்கள் கீழே உள்ள படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

9095334846

Close