Adiraipirai.in
islam

மதினா அருகே நிலத்துக்குள் புதைந்திருந்த 9000 ஆண்டுகள் பழமையான சுவர்கள்!

உலகில், இந்தியாவை போன்று மிகவும் பழமையான மனிதர்கள் வாழ்ந்த நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா உள்ளது. இந்த நாட்டின் வரலாறு குறித்து பல நாடுகளை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் கென்னடி என்பவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல், அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதினா அருகே உள்ள பாலைவன பகுதியில், பூமிக்கு அடியில், 400-சுவர்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளார். இந்த கட்டிட அமைப்பு 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம், அரபு மக்களின் வரலாறு தெரிய வரும் என ஆராய்ச்சியாளர் கென்னடி தெரிவித்துள்ளார்.