Adirai pirai
Crime islam தமிழகம்

ருக்‌ஷானா என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை..! ப்ரஷாந்த் என்ற இளைஞர் கைது!

கோவையை அடுத்துள்ள கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஹைதர் ஷெரீஃப் என்பவரின் மகள் ருக்‌ஷானா( 21), பி.எஸ்.சி பட்டதாரி. திங்கள்கிழமை திடீரென்று வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார் ருக்‌ஷானா. அவரின் பெற்றோர் தீவிரமாகத் தேடியும் ருக்‌ஷானா கிடைக்கவில்லை. பின்பு சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

காவல்துறை விசாரணையில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த பிரஷாந்த் என்பவர் சிக்கினார். அவரிடம் பெறப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு போலீஸார் கால்லாறு பகுதிக்கு விரைந்தனர். அங்குதான் ருஷ்வானாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதும், ருஷ்வானா பிரஷாந்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும் அதன்பிறகுதான் தெரியவந்தது. ருஷ்வானாவின் முகம் கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருக்கிறது. உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. பிரஷாந்த் தன் மகளை ஏமாற்றி கொலை செய்துவிட்டதாகவும், அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ருஷ்வானாவின் பெற்றோர் கதறினர். கல்லாறில் என்ன நடந்தது? எதற்காக பிரஷாந்த் ருஷ்வானாவைக் கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்…

கொலைக்குண்டான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

எங்கே இருக்கிறது மனிதம்! சுவாதிக்காக குரல் கொடுத்தவர்களுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நந்தினிக்கும், சிறுபாண்மை சமூகத்தை சேர்ந்த ருக்‌ஷானாவுக்கும் கொடுமை நேரும்போது, வாய் ஊமையாகிவிட்டது.