அதிரை கடற்கரைத்தெரு ரயில் நிலையம் அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அகற்றக்கோரி மனு!

அதிரையில் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலைய பணிகள் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் இருந்து செல்லும் கழிவு நீர் வடிகால் அடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் ஒரே பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அதிரை கடற்கரை தெரு முஹல்லா மற்றும் தீனுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினர், முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களுடன் அதிரை பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.

ப்

Close