அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி – ஆர்வத்துடன் வருகை தந்த மக்கள்

நேற்று அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிரை தவ்ஹீத் பள்ளியில் பெண்களுக்குக்கான இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்னும் மார்க்க விளக்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கு தனி
இட வசதி அளித்து இந்நிகழ்ச்சியின் காணொளியை தொலைக்காட்சி பெட்டி மூலம்அதிரை தவ்ஹீத் பள்ளியில் ஒளிபரப்பினர். 

இந்நிகழ்ச்சி இஷா தொழுகை வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு அதிரையை சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். 
                          

                          

இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் வாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனை ஒரு வாய்ப்பாக கருதிய பெண்கள் பலர் ஆர்வத்துடன் தங்களுக்கு மார்க்கம் சம்மந்தமாக தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர். 

இவர்களின் சந்தேகங்களுக்கு மெளலவி. சுலைமான் ஃபிர்தவ்சி அவர்கள் சிறப்பாக விடையளித்து தெளிவிபடுத்தினார்.

Close