காணாமல் போன முத்துப்பேட்டை மாணவன் முஜாஹித்தீன் கிடைத்து விட்டார்!

முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் ஆகியோரின் மஹான் A.முஜாஹிதீன் இவர் அதிராம்பட்டினம் டுடோரியல்லில் படித்து வருகிறார்.  கடந்த 19.10.2017அன்று படிக்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை அவரது பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு தேட ஆரம்பித்தனர். அதிரை பிறை மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் முஜாஹித்தீன் வீடு திரும்பினார். முஜாஹித்தீன் தஞ்சைக்கு சென்று கடையில் வேலை பார்த்ததாகவும், அதன் பிறகு தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Close