துபாய்த் தமிழர்ச் சங்கமம் சார்பாக கவியன்பன் கலாம் அவர்களுக்குப் பாராட்டு விழா

19.04.2013 வெள்ளியன்று நடைபெற்றது வருகை தந்த அனைவரையும் திருமதி பத்மப்ரியா இராமச்சந்திரன் ( பொதுச் செயலாளரர் , துபாய் தமிழ் தளிர் ) அவர்கள்
வரவேற்றனர் .நிறுவனர்
திரு எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையில் . அபுதாபி யை சேர்ந்த
திரு ஜலில் அகமது அவர்கள் பொதுச் செயலாளராகவும் , துபாய் யை சேர்ந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மீண்டும் அவைத் தலைவரகவும் , அஜ்மானை சேர்ந்த திரு மாரியப்பன் அவர்கள் பொருளாளராகவும் , துபாய் யை சேர்ந்த திரு செய்யது அப்துல் கறீம் அவர்கள் ஒருங்கிணைபாளராகவும் பதவியேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டனர். மாடர்ன் பாமிலி கிளினிக் உரிமையாளர் டாக்டர் விஸ்வநாதன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அவர்கள் பெற்றோர்களுக்கு அரியதொரு கருத்துரை வழங்கினார் . மரபுக் கவிஞர் திரு கவியன்பன் கலாம் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக பாராட்டு விழா அமைத்து கௌவ்ரவப் படுத்தப்பட்டார்

நன்றி:
தகவல்: துபாய்த் தமிழர்ச் சங்கமம்
Close