பட்டுக்கோட்டையில் நடந்த தடகளப் போட்டியில் அதிரை மாணவர் சாதனை!

வருடா வருடம் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்ளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில்
வெற்றியடையும் மாணவர்களுக்கு பரிசும் மேலும் அவர்களுக்கு மாவட்ட அளவில் நடக்கும் தடகளப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்த வருடம் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் யூசுஃப் என்ற மாணவர் இந்த வருடம் குண்டு எறிதல் போட்டியில் மூண்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்கள்.
Close