அதிரை சும்சுல் இஸ்லாம் சங்கம், சுற்றுசூழல் மன்றத்தால் 10 குப்பை கூண்டுகள் அர்ப்பணிப்பு (படங்கள் இணைப்பு)

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்று சூழல் மன்றம் இணைந்து அதிரையில் இரும்பு குப்பை கூண்டுகள் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக சி.எம்.பி லேன் உள்ளிட்ட பகுதிகளில் 10 குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்தகட்டமாக அதிரை போஸ்ட் ஆபிஸ் தெரு, ஆலடித்தெரு, ஏஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டன.

SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், மற்றும் சுற்றுசூழல் மன்றம் 90.4 நிர்வாகிகளாக வரிசை முஹம்மது, LIC ஓம் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Close