அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில வாரங்களாக மழை எட்டிப்பார்க்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில், அதிரை மக்கள் தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்

Close