Adirai pirai
posts

அதிரை மின் வாரியத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம், மக்கள் அதிர்ச்சி

 அதிரையில் நேற்று நம் மாற்றுமத சகோதரர்களால் சிறப்பாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இதில் ஒரு வருந்தத்தக்க செய்தி என்ன என்றால் அதிரையில் பலதரப்பட்ட மக்கள் வந்து செல்ல கூடிய இடமான அதிராம்பட்டினம்
துணை மின்வாரியத்தில் இதை விமர்சையாக கொண்டாட்டினர். 

இதில் என்ன வருத்தம் என்றால் இதில் அலங்கார விளக்குகள் தோரணம் ஆகியன வைத்து அலங்காரம் செய்திருந்தனர். இது போன்ற அரசு அலுவலகத்தில், பொது சொத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படுவது தவறு. 

மேலும் நேற்று முன் தினமும் இது போன்று அலங்கார விளக்கௌகள் மின்ன அதிரை E.B காட்சியளித்தது, ஆனால் அந்த நேரம் அதிரையில் மின்சாரம் துண்டிகப்பட்டிருந்து. இது போன்று மின்சாரம் இல்லாத சமயத்திலும் இங்கு இந்த அலங்கார விளக்குகள் தேவையா.

 மக்களுக்கு மின்சாரத்தை சேமிக்க சொல்லித்தர வேண்டிய மின்சார வாரியமே இப்படியிருந்தால் என்ன செய்வது. நீங்களே செல்லுங்கள்…!

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy