Adirai pirai
உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: திருச்சி சிறையிலிருந்து 3 அதிரையர்களும் ஜாமீனில் விடுதலை

அதிரையில் கடந்த 16 ஆம் தேதி முன்பு பைக்கில் வந்துக்கொண்டிருந்த நபர் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அதிரையர் மீது மோதியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர் நிஜாம்(PFI), அன்வர் (SDPI), சைஃபுத்தீன்(நாம் தமிழர் கட்சியின் அதிரை நகர தலைவர்) அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்குவந்த போலீசாருக்கும் இந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மூன்று பேரையும் போலீசார் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் அதிரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையம் முன்பாக திரண்டனர். இருப்பினும் 3 பேரை காவல் துறையினர் விடுவிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி மணியளவில் கைது செய்யப்பட்ட அதிரை இளைஞர்கள் 3 பேரும் திருச்சி சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை விடுவிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மூன்றுபேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.