Adirai pirai
posts

அதிரையில் நோய் பரவும் அபாயம், மக்களே உஷார்…!

தற்போது எங்கு பார்த்தாலும் டெங்கு, மலேரியா மற்றும் நம்மால் உச்சரிக்க முடியாத பல வகையான நோய்கள் பறவி கொண்டே உள்ளன. இதற்குக் காரணம்   சுத்தமின்மை மற்றும் சுகாதார சீர்கேடு. இதற்கு காரணம் சுகாதாரம் குறித்து நமதூர் மக்களிடையில்
போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும்.

சுத்தமின்மையினால் தான் பல நோய்கள் பரவுகிறது. தனது வீட்டில் சேரும்  குப்பைகளை, குப்பை கொட்டும் இடத்தை விட்டு வேறு எங்கையோ கொட்டுகிறார்கள். நமதூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டி அமைத்து உள்ளது. சிலர் மட்டும் தான் குப்பைத் தொட்டியில் குப்பையை கொட்டுகிறார்கள். பலர் குப்பைத் தொட்டியைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் குப்பையை கொட்டுகிறார்கள்.

இன்னும் சொல்ல போனால் சில பேர் தனது வீட்டு அருகில் உள்ள மழை நீர் கால்வாய், அல்லது கழிவு நீர் கால்வாயில் குப்பையை போட்டுவிடுகிறார்கள். இதனால் மழைக் காலத்தில் மழை நீர் அந்த கால்வாயில் செல்ல முடியாமால் அங்கு தேங்கி பல நோய்க்கிருமிகள் பரவுகிறது. இன்னும் சொல்ல போனால் சேது ரோட்டில் உள்ள முக்கியமான கழிநீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது பார்த்தால், அதிகமாக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் இன்னும் பல மக்காத அடைப்பை உண்டாக்கும் பொருட்கள் கிடக்கின்றன.

இதெல்லாம் குப்பை தொட்டியில் போட வேண்டியது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் போட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இதனால் பல நோய்கள் பரவுகிறது. இனியாவது குப்பைகளை வெளியே பொடாமல் குப்பை தொட்டியில் போட்டு நோய்கள் வாராமல்  காத்து கொள்ளுங்கள் .

                               ” பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்

                                 வருங்கால சந்ததிக்களை காப்போம் “

ஆக்கம்:
N . காலித் அஹ்மத். (இந்திய மாணவர் சங்கம் )

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy