அதிரையில் BIKE திருட்டு – திருடர்கள் அட்டூழியம்!

அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அஹமது கபீர். இவரது மகன் ஷேக் முஹம்மது (17). இமாம் ஷாபி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் டிவிஎஸ் அப்பாச்சீ 180 சிசி பைக்கை வைத்திருந்தார். ₹96 ஆயிரம் மதிப்பிலான இந்த பைக்கை கடந்த வியாழன் கிழமை அன்று இரவு 11 மணிக்கு வாய்க்கால் தெருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

இதன் பின்னர் மறுநாள் காலை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை பார்க்க வந்தபோது அங்கு பைக் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஷேக் என்பவரது வாகனத்தை திருட முயன்றுள்ளனர். வாகன உரிமையாளரை கண்டதும் திருடர்கள் ஓட்டம் பிடித்தது சம்பந்தமாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமதூரில் நடைபெறும் திருட்டினை தடுத்து நிறுத்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டும் தான் மக்களின் அச்சம் நீங்கும்.

 

Close