கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அய்யூப் நஸ்மீனுக்கு இந்த போனஸ் இடம் வழங்கப்படுவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.
இதற்கான முடிவு வியாழனன்று எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இலங்கையில் தமிழ்-முஸ்லிம் உறவுகள் ‘நீறு பூத்த நெருப்பு’ போல் உள்ளது என்றும், தமிழ்-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதும், அவர் தோல்வியடைந்த பிறகு அவரைக் கழற்றி விடுவதுமாக பார்க்கப்படாமல், இணக்கப்பாட்டுடன் செயலாற்றவே இந்த முடிவு எனவும் அவர் கூறுகிறார்.
எஞ்சியுள்ள மற்றொரு போனஸ் இடத்துக்கு, ஆண்டுக்கு ஒருவராக ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கவும் ஒரு யோசனை முன்வைக்கப்படுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 See more at: https://www.thoothuonline.com ' />

இலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் தமக்குக் கிடைத்துள்ள இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்குவது என்று முடிவெடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில்
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அய்யூப் நஸ்மீனுக்கு இந்த போனஸ் இடம் வழங்கப்படுவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில்

தெரிவித்தார்.

இதற்கான முடிவு வியாழனன்று எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இலங்கையில் தமிழ்-முஸ்லிம் உறவுகள் ‘நீறு பூத்த நெருப்பு’ போல் உள்ளது என்றும், தமிழ்-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதும், அவர் தோல்வியடைந்த பிறகு அவரைக் கழற்றி விடுவதுமாக பார்க்கப்படாமல், இணக்கப்பாட்டுடன் செயலாற்றவே இந்த முடிவு எனவும் அவர் கூறுகிறார்.
எஞ்சியுள்ள மற்றொரு போனஸ் இடத்துக்கு, ஆண்டுக்கு ஒருவராக ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கவும் ஒரு யோசனை முன்வைக்கப்படுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 See more at: https://www.thoothuonline.com

Close