அதிரையில் நடந்த மருத்துவ முகாமில் வெள்ளம் போல் திரண்ட மக்கள் (வீடியோ, புகைப்படங்கள்)
பொது மருத்துவ முகாம் இன்று காலை 8:00 மணிமுதல் மதியம் 12:00 மணி வரை நடைப்பெற்றது. இதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.
இந்த முகாமில் இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையிலிருந்து இங்கு வந்து மக்களுக்கு சேவையாற்றினர். மேலும் காதிர் முகைதீன் கல்லூரி NSS மாணவர்கள் இந்த நிகழ்வைல் கலந்து மக்களுக்கு பெரும் சேவையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் லயன்.அகமது கபீர், செயலாளர் லயன்.சாகுல் ஹமீது லயன்.அகமது லயன்.மேஜர் கணபதி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
அதிரை மக்களின் நன்மைக்காக இந்த மாபெரும் முகாமை ஏற்பாடு செய்த அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.