6வது முறையாக கண்ணை தானமாக பெற்று அதிரை லயன்ஸ் சங்கம் சாதனை

பட்டுக்கோட்டை வடசேரி ரோடு அய்யா திருமண மஹால் அருகில் உள்ள பானுமதி ஹோம்ஸில் குடியிருக்கும் அதிராம்பட்டினம் 2ஆம் நம்பர் பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம்
அவர்களின் தாயாரும், பேராசிரியர் சீனிவாசன், ER.செந்தில் குமார் ஆகியோரின் பாட்டியும் தட்சினா மூர்த்தி அவர்களின் மனைவியுமான திருமதி.மங்களாம்மாள் அவர்கள் 15-09-13 அன்று நன்பகல் 12 மணிக்கு இயற்கை மரணம் அடைந்தார்கள். இதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினர் தானாக முன்வந்து அவர்களுடைய கண்களை தானமாக தர சம்மதித்து அதிரை லயன்ஸ் சங்கத்தை அனுகியதால் அதிரை லயன்ஸ் சங்கத்தால் அவருடைய கண்கள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க தலைவர் லயன்.எம்.அஹமது, லயன்.பேரா செய்யது அகமது கபீர், பொருளாளர் லயன்.சாகுல் ஹமீது மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் லயன்.S.H.அப்துல் ஹமீது, லயன்.ஆப்பில் நெய்னா முஹம்மது, லயன்.ஆறுமுகசாமி மற்றும் லியோ சங்க நிர்வாகிகள் லியோ.அதிரை மைதீன், லியோ.இஸ்மாயீல் ஆகியோர் இழப்பில் வாடும் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்களையும், கண்களை தானம் செய்ததற்க்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

இறந்தும் இருவர் வாழ்வில் ஒளியேற்றிய மங்களம்மாள் குடும்பத்துனரின் சமுக சேவை பாரட்டத்தக்கது.

                         
                                

Close