பெட்ரோல் விலையை
நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை
எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
ரூ.2.07 உயர்வு
இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.63 (வரிகள் நீங்கலாக) உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டன. வரிகளுடன் சேர்த்து, 2 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.அதன்படி, சென்னையில் ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.79.55 ஆக உயர்ந்தது. இது, லிட்டருக்கு ரூ.2.07 அதிகம் ஆகும்.
டெல்லி
டெல்லியில், பெட்ரோல் விலை ரூ.74.10–ல் இருந்து ரூ.76.06 ஆக உயர்ந்தது. இது, லிட்டருக்கு ரூ.1.96 அதிகம் ஆகும்.கொல்கத்தாவில், பெட்ரோல் விலை ரூ.81.57–ல் இருந்து ரூ.83.62 ஆக உயர்ந்தது. இது, லிட்டருக்கு ரூ.2.05 அதிகம் ஆகும்.மும்பையில், பெட்ரோல் விலை ரூ.81.57–ல் இருந்து ரூ.83.63 ஆக உயர்ந்தது. இது, லிட்டருக்கு 2.06 அதிகம் ஆகும்.இது, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 7–வது விலை உயர்வாகும். ஜூன் மாதத்துக்கு பிறகு லிட்டருக்கு மொத்தம் ரூ.10.80 உயர்ந்துள்ளது.
எதிர்பார்த்தது பொய்த்தது
ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலை 15–ந் தேதிவாக்கில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்மாத தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி விட்டன.இருப்பினும், ரூபாய் மதிப்பு உயர்ந்ததன் பலன், அடுத்த விலை நிர்ணயத்தின்போது, நுகர்வோருக்கு அளிக்கப்படும் என்று இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினத்தந்தி
 
' />

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு, அதிர்ச்சியில் மக்கள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 ரூபாய் 7 காசு உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்

Close