அகிலத்தை அடிமையாக்கும் அமெரிக்காவே!

சிரியாவின் மீது போரால்
…..சிறியோரை அழிக்கப் போறாய்
புரியாதோ உன்றன் கோபம்
……பெட்ரோலே உன்றன் தாகம்
விரிவாகச் சொல்லா ஐநா
……வீணாகப் பேசும் பொய்நா
தெரியாதோ உன்றன் சூழ்ச்சி
……..தெளிவற்றோர் காண்பர் வீழ்ச்சி

அடாவடியின் தலைமை நீயே
……அகிலத்தை அழிக்கும் தீயே
விடாப்பிடியின் போக்கால் போரும்
……விதைப்பதனால் அழியும் பாரும்
கடாஃபியையும் கொன்று விட்டாய்
……கண்ணுக்குள் சிரியா தொட்டாய்
சுடாதவுன்றன் மனத்தின் சாட்சி
……சுடுகின்ற குண்டின் காட்சி
காசுகளைப் பண்ண வேண்டி
……கண்டங்கள் எல்லாம் தாண்டி
வீசுகின்ற கணைகள் ஏவ
……வித்திட்ட இஸ்ரேல் கூவ
கூசுகின்ற பொய்நா கூட்டம்
……கூடுவதே போரின் நாட்டம்
மாசுகளே பரவும் பாரில்
……மாபாத கமானப் போரில்
அசாதவனும் கோர மன்னன்
……அழித்துவந்தான் ஆங்கே இன்னும்
ஃபசாதவனும் கெமிக்கல் கொண்டே
……பச்சிளம்பா லகரைக் கொன்றான்!
விசாரணையில் தீர்ப்பும் எட்டும்
……வீணானப் போரை விட்டால்
அசத்தியத்தின் நிலையில் தானோ
……அகிலத்தை மிரட்டல் ஏனோ?


Close