Adirai pirai
posts

ஆசிரியப் பெருந்தகைகட்கு உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.

 • அகரம் கற்பித்துச்
  சிகரம் ஏற்றிவிட்டு
  உயரம் காட்டியவர்களை
  உயரம் சென்றாலும் மறவேனே!

  யான்படித்த பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால்
 • தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே
 • யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளியாமே
 • யான்குடித்த தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி

  காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே

 • சாதிமதப் பேதமற்ற சமத்துவமே கொண்டேனே
 • ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே
 • நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே
   தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
  அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
  இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
  சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்

  தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி

 • வியாபார நோக்கங்கள் விட்டொழித் தெல்லார்க்கும்
 • நியாயமான கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
 • அயராது ழைக்கின்ற ஆசிரியர் தலைமையினால்
 •  
ஆசிரியப் பெருந்தகைகட்கு உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.
கா.மு.பள்ளி என்னும் தாய்மடியில் அறிவமுதம் ஊட்டப்பட்டதன் பலனை இன்றும் அனுபவிக்கும் எமது நன்றிக் கடன்!
கணிதமேதை- இலக்கியச் செம்மல் ஜனாப் ஹாஜா முஹைதீன் சார்ஆங்கில ஆசான் ஜனாப் அலியார் சார்தமிழமுதம் ஊட்டி என்னைப் புலவராக்க எண்ணிப் பயிற்சியளித்தத் தமிழாசான்கள் புலவர் ஷண்முகனார் மற்றும் உயர் திரு. இரமதாஸ்மறக்கவியலாத மாண்புமிக்க ஆசான்கள்.
(புலவர் ஷண்முகனாரின் முயற்சியும் பயிற்சியும் என்னை அவரைப் போன்ற புலவர் பட்டப் படிப்புக்குத் தூண்டினார்கள்; வேண்டினார்கள்;நூலகத்திலுள்ள அனைத்து “யாப்பிலக்கண நூல்களையும்” என்னிடம் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்; ஆயினும், குடும்பத்தார் “வணிகவியல்”தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் திரு. ஷண்முகனார் அவர்களின் அவாவினை நிறைவு செய்ய இயலவில்லை; ஆயினும் அவர்கள் ஊட்டிய தமிழமுதம் இன்றும் என்னுள் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்களின் அவாவினை நிறைவு செய்வேன் என்று இந்த நன்னாளில் அவர்கட்கு உறுதியளிக்கிறேன்)
அண்மையில் என் வகுப்புத் தோழர் வீட்டுத் திருமண விழாவிற்கு வந்த தமிழாசான் திரு.இரமதாஸ் அவர்களைச் சந்தித்ததில் பேரானந்தம் அடைந்தேன்; அவர்களிடம் என் கவிதைத் தொகுப்பினைப் பற்றி சொன்னதும், அவர்களும் ஆன்ந்தத்தில் கண்ணீர் வடித்து, “ஒரு தந்தையைப் போன்று மகிழ்கின்றேன்; நான் கற்பித்த மாணவனைக் கண்டு, என் கற்பித்தலுக்குக் கிடைத்த பேறாக எண்ணுகின்றேன்” என்றார்கள்.
ஓவிய ஆசான் வாவன்னா சார் அவர்கள் , ஓவியம் மட்டும் கற்று தரவில்லை; இடையில் ஆங்கில இலக்கணமும் கற்பித்தார்கள்.
இப்படியாக , மலரும் நினைவுகளாய் மாண்புமிக்க ஆசான்களை, இந்த நாளில் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டவனாக என் கருத்துக்களைப் பதிகின்றேன்.