அதிரை கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல், பேரூராட்சி அதிரடி நடவடிக்கை!!

அதிரையில் பேருராட்சித் தலைவர் அவர்களால் மார்ச் 2012 அன்று தடை செய்யப்பட்ட பாலிதீன் சட்ட விரோதமாக அதிரையின் பெரும்பாலான கடைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.இந்நிலையில் நேற்று சட்ட விரோதமாக பாலிதீன் பைகளை உபயோகித்த பல கடைகளுக்குள்
நிழைந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக பாலிதீன் பைகளை கைப்பற்றி அபராதம் விதித்துச் சென்றனர்.இதை பிரப்பித்த ஆரம்ப காலக்கட்டத்தில் நமதூரில் பாலிதீன் பைகளை காணக்கூட முடியவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல மீண்டும் அதிரைக்கு மீண்டும் வந்தது.இந்த புகாரை நாம் இரண்டு முறை அதிரை பிறை தளத்தில் பதிந்துள்ளோம்.ஆனால் எந்த பயனும் இல்லை,தற்போது
பேரூராட்ச்சி நிர்வாகம் மேற்க்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்க்கிறோம்.பாலிதீன் பைகளை மேலும் உபயோகிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதே.
கடை வியாபாரிகளே இப்பவே பாலிதீன் பைகளை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்களுக்கும் ஃபைன் தான்.
Close