முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலைய கட்டுமான பணி,(புகைப்படங்கள்) அதிரை மக்களின் கனவு நிறைவேறுமா?

நமதூரின் பேருந்து நிலையத்தை சீரமைத்துத் தர வேண்டும்,வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும் என்ற நமதூர் மக்களின் பல நாள் கோரிக்கை (கனவு) நிறைவேறும் வகையில் சென்ற ஆண்டு அதிரை பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம்

கட்டுவதற்க்கான பணிகள் துவங்கப்பட்டன.இச்செய்தியை அறிந்த நமதூர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.ஆனால் அவர்களின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை என்றே கூற வேண்டும்.வணிக வளாக கட்டுமான பணி மின்னல் வேகத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு பணியும் நடைப்பெறாமல் முடங்கியுள்ளது.வேலைகள் முடிந்து வியாபாரம் நடக்க வேண்டிய இந்த கட்டடம் தற்பொழுது எப்படி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?…..கயவர்கள் இரவு சீட்டாடும் இடமாகவும்,மது அருந்தும் இடமாகவும் தான் தற்பொழுது இருந்து வருகிறது.இதற்க்கு என்ன தான் முடிவு? நமதூர் மக்களின் கனவு நனவாகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.

Close