அதிரையில் தர்கா தீயில் கருகி நாசம்!!அப்பகுதியில் பரபரப்பு!!!

 அதிரை காட்டுப் பள்ளி தர்காவிற்க்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த நெய்னா பிள்ளை அப்பா அவர்களின் அடக்கஸ்தலதின் மேற்க்கூரை நேற்று முந்தினம் தீயால் கருகி முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்த தீயடைப்புப் படையினர்
விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்களிடம் நாம் விசாரித்ததில் இது தற்ச்செயலாக நடந்த காரியம் அன்று,யாரோ சமுக விரோதிகளின் செயலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களை வைத்து இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

     
Close