ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 40 ரூபாய் வரை சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை கட்டணத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து ரயில்வே துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Close