அதிரையில் வெளுத்துக்கட்டுகிறது மழை..!

அதிரை இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,ஆனால் மழை வரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை,இந்நிலையில் இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெய்யத் துவங்கியது. மழை ஒரு மணி நேரம்
ஆகியும் இன்னும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதம் முழுவதும் மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் அதிரை பெய்து கொண்டிருக்கும் இந்த மழையால் சூடு தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது,இதனால் அதிரை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விடாமல் பெய்து கொண்டிருக்கும் இந்த கன மழையால் அதிரை சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளன.
Close