Adirai pirai
CLIMATE உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த 4 cm மழை..!

தமிழகத்தில்  வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிரையிலும், கடந்த 4, 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய இந்த மழை, இன்று காலை வரை விடாமல் சாரல் மழையாகவும் கனமழையாகவும் கொட்டி தீர்த்தது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அதிரை வானிலை ஆய்வு மையம், அதிரையில் நேற்று ஒருநாளில் 4 செ.மீ மழை கொட்டி தீர்த்ததாக தெரிவித்துள்ளது. அதே போல் தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy