Adirai pirai
posts

சாலை விபத்துக்களை தடுக்க கருவி… துபாய் இளைஞர்களின் சூப்பர் கண்டுபிடிப்பு!

துபாய்: சாலை விபத்துக்களை தடுக்க புதிய கருவி ஒன்றை துபாய் இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

துபாய் அரசு தொழில்முனைவோரை ஊக்குவித்துவருகிறது. சமூக மேம்பாட்டுக்கான தொழில்களை இளைஞர்கள் தொடங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்நிலையில் துபாயை சேர்ந்த இளைஞர்கள் சாலை விபத்துக்களை தடுத்து எச்சரிக்கை செய்யும் கருவிகளை உருவாக்கியுள்ளனர். இக்கருவிகள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுபவை ஆகும்.

சாலை விபத்துக்கள் உலகம் முழுவதும் தினந்தோறும் நடந்து வருகின்றன. தினமும் சராசரியாக 3,400பேர் சராசரியாக சாலை விபத்துகளில் இறந்து வருகின்றனர். 50மில்லியன்பேர் விபத்துக்களில் படுகாயம் அடைகின்றனர். அவர்களில் 20சதவீதம் பேர் நிரந்தர ஊனம் என்ற தன்மையை அடைகின்றனர். சாலை விபத்துக்கள் 94சதவீதம் மனித தவறுகளாலேயே ஏற்படுகின்றன. சாலைவிதி மீறல், வேகம், கார்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாமல் இருப்பது போன்றவை விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்நிறுவனம் தற்போது விபத்துக்களை முன்னெச்சரிக்கை செய்வதற்கான ஸ்கேனர், கருவி ஆகியவைகளை கண்டுபிடித்துள்ளது. இவற்றை சாலைகளிலும் கார்களிலும் பொருத்தி ஒருங்கிணைத்து கண்காணிக்கலாம். சாலைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இவ்வளவு தூரத்தில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்று ஏஐ தொழில்நுட்பம் கணித்து சொல்கிறது. இதனால் விபத்துக்கள் எளிதாக தடுக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் வளைகுடா நாடுகள் முன்னணியில் உள்ளன. சவுதிஅரேபியா இத்தொழில்நுட்பத்தில் மனிதரோபோவை உருவாக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறது. துபாய் இத்தொழில்நுட்பத்துக்கான அமைச்சர் ஒருவரையே நியமித்துள்ளது.