Adirai pirai
posts

ஹலால் பீர் அருந்துபவரா நீங்கள்..?இதை அவசியம் படியுங்கள்…

‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ( இப்னுமாஜா)
ஹறாமான

மதுவை ஹலால் என்ற நோக்கில் முஸ்லிம்களின் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு புதிய யுக்தியை கையாள்கிறது அமெரிக்கா. ஆல்கஹால் கலந்தால்தான் ஹறாம் என்றும் ஆல்கஹால் கலகப்காவிட்டால் அது ஹலால் என்றும் சில விஷமிகள் முஸ்லிம்களை குழப்ப பார்க்கின்றனர். ஆனால் போதை தரும் அனைத்து வஸ்த்துக்களும் ஹறாம்தான் என்று முதலில் அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

புஹாரி-80. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
போதையை ஏற்படுத்துகின்ற ஆல்கஹால் (Alcohol) இல்லாத விஸ்கியை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. சாதாரணமாக பியரில் (Beer) 4 முதல் 6% ஆல்கஹால் (Alcohol) மட்டுமே உள்ளது. வைன் (Wine) 9-16%, வோட்கா 40%, பிராந்தி 35-60%, ரம் 37-80% என்று சரக்குக்கு சரக்கு ஆல்கஹால் சதவீதம் வேறுபடுகிறது.
அண்மைகாலமாக முஸ்லிம்களை எவ்வாறு தவறான வழிக்கு இட்டுச்செல்லலாம் என்றும் அவர்களை அவர்களின் கொள்கைகளிலிருந்து எவ்வாறு மாற்றலாம் என்று பல யுக்த்திகளை கையாள்கின்றனர், அதில் இதுவும் ஒன்றுதான். எமது தலைவர் முஹம்மது நபி ஸல்லள்ளாஹ| அலைஹிவஸல்லம் என்ன கூறியிருக்கிறார்கள், “யுதர் எனபவன் முஸ்லிம்களை அழிப்பதற்கு பல திட்டங்களை தீட்டுவான். ஆனால் அவை சிறு காலமாகவும் இருக்கலாம், நீண்ட காலமான திட்டமாகவும் இருக்கலாம்” என்றார்கள். இன்று அது நிஜமாகிறதல்லவா.
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
ஹறாம் ஹறாம்தான் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே தயவு செய்து இவ்வாறான விடயத்தில் மிகவும் அவதானமாக இருங்கள்.
புஹாரி-459. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ’பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
கலிமாவோடு வாழ்வோம், கலிமாவோடு வபாதாகுவோம்.