Adirai pirai
posts

அதிரையில் மீண்டும் தலை தூக்கி இருக்கும் சைத்தான் (பாலிதீன் பை)

ஒன்றரை வருடத்திற்க்கு முன்பு…..பேரூராட்சித் தலைவரின் அறிவிப்பு…..அதிரையில் பாலிதீன் பைகளுக்குத் தடை…..

அறிவிப்பு வந்த மூன்று மாதங்களில் நமதூரில் பாலிதீன் பைகளை பார்க்கக் கூட முடியவில்லை,இதனால் மக்களும்,வியாபாரிகளும்
அபராதத்திற்க்கு பயந்து பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் துணிப்பைகளை உபயோகித்து வந்தனர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இந்த பாலிதீன் பை,கப்புகளின் ஆபத்தை அறிந்தால் யாரும் இதை உபயோகிக்கக் கூட மாட்டார்கள்.இதனால் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய் வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது.ஒரு சிறிய கீஸ் பை மண்ணில் முழுமையாக மக்கிபோவதற்க்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகுமாம்,இந்த நிலைமை நீடித்தால் நம் நிலத்தடி நீர் எப்படி அதிகரிக்கும்,சற்று சிந்தியுங்கள் எனவே மக்களே நீங்கள் இதை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
எனவே மதிப்பிர்க்குரிய பேரூராட்ச்சித் தலைவர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு அதிரை பிறையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy