அதிராம்பட்டினம்-08 (உள்கட்டமைப்பு)

அதிரையை பொருத்தவரை,நமதூரில் உள்ள கடைத்தெரு மிகவும் பரபரப்பான என்னேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வியாபார தளமாக கருதப்படுகிறது.அன்டை கிராமங்களில் வசிக்கக் கூடிய மக்கள் மீன்,கறி,
காய்கற்கள்,பழங்கள் மற்ற மளிகை பொருள்கள்,வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற அனைத்து விசயங்களுக்காகவும் அதிரைக்கு  வந்து செல்கின்றனர்.இதனால் அதிரை பேருந்து நிலையம் என்ரென்றும் பரபரப்பாக,கூட்டம் நிறைந்ததாக காணப்படுகின்றது.
    அதிரையில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்காக தனியாக துணை மின்சார வாரியம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
     அதிரையில் மொத்தம் மூன்று பெட்ரோல் பங்குகள் உள்ளன.இதில் 2  இந்தியன் ஆயில் பங்குகளும்,1 பாரத் பெட்ரோலியம் பங்குகளும் இயங்கிவருகிறது.
     தொழில்நுட்பத்தை பொருத்தவரை அதிரை பிற ஊர்களைக் காட்டிலும் மிக மிக முன்னேரிய ஊராக கருதப்படுகிறது.இங்கு பிரபலமான செல்போன் நிறுவனங்களாக கருதப்படும் ஏர்செல்,ஏர்டெல்,BSNL,டொகொமோ,ரிலையன்ஸ் போன்ற அனைத்து நிறுவன சிக்னல்களும் தங்கு  தடையின்றி கிடைக்கும் வசதி உள்ளது.மேலும் இங்கு அதிரைக்கான பிரத்யேக தொலைப்பேசி நிலையம்,தபால் நிலையம்,காவல் நிலையம்,இண்டேன் கேஸ் நிலையம்,இரயில் நிலையம்,பேருந்து நிலையம் போன்ற அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன.
மேலும் அதிரையில் பல்வேறு விதமான கல்வி நிறுவனங்கள் இயங்கை வருகின்றன.பள்ளிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இமாம் ஷாபி பள்ளி மற்றும் காதிர் முஹைதீன் கல்விகுழுமங்கள் உள்ளன.கல்லூரிகள் என்றால் காதிர் முஹைதீன் கல்லூரி மற்றும் அதிரைக்கு மிக அருகாமையில் உள்ள அன்னா பல்கலைகழகம் இராஜா மடத்தில் இயங்கி வருகிறது.
    நமதுரில் இந்தியாவில் முன்னனி வங்கிகளாக கருதப்படும் கனரா வங்கி,இந்தியன் வங்கி,ஸ்டேட் வங்கி,தனலெஷ்மி வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.மேலும் அதிரையில் தனியே நூலகம்,வானிலை ஆய்வு நிலையம் போன்ற அரசு அலுவலகங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

Close