2500 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

இதுவரை கட்டணம் நிர்ணயிக்காதபள்ளிகள், கட்டணம் போதாது என்று மேல் முறையிட்ட பள்ளிகள் உள்பட மொத்தம் 2ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் 5–ந்தேதி முதல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில்
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்ததையொட்டி பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் தகுதி உள்ளிட்டவற்றை கொண்டு பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது அந்த கமிட்டியின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு உள்ளார். இவர் தலைமையில் உள்ள கமிட்டி இதுவரை ஏராளமான பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அறிவித்து உள்ளது.
கட்டணம் போதாது என்று கூறி மேல் முறையீடு செய்த பள்ளிகள் பல உள்ளன. இதுவரை கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகள் இருக்கின்றன. கட்டணம் நிர்ணயிப்பதற்காக விவரம் கேட்டு அழைக்கப்பட்டும் பள்ளிகளின் நிர்வாகிகள் பலர் வருவதில்லை. இப்படியாக மொத்தத்தில் 2ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக பள்ளிகள் தரப்பில் இருந்து நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் 5–ந்தேதி முதல் விசாரணை தொடங்குகிறது. தினமும் 50 பள்ளிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சில பள்ளிகளில் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. புகார் வந்த பள்ளிகள் குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Close