Adiraipirai.in
POLITICS தமிழகம்

மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்த மறுமலர்ச்சி தமுமுக..!

ஏழு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமுமுக, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தது.

இன்று (7.11.2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA தலைமையில், மறுமலர்ச்சி தமுமுக வின் தலைவர் சீனி முகம்மது இணைந்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா முன்னிலை வகித்தார்.

முதல்கட்டமாக, நேரில் வந்து மதமுமுக தலைவர் சீனி முகம்மது அவர்களோடு, மதமுமுக மாநிலச் செயலாளர்களான கடாபி, AST கலீம், அப்துல் கய்யூம், தலைமை நிலையச் செயலாளர் JS மீரான், தலைமைக் கழக பேச்சாளர் காதர் ஷெரிப், மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர் முஹம்மது ஜியா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மஜக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு உறுப்பினராக இணைந்தனர்.

இந்நிகழ்வில், மஜகவின் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார், தென் சென்னை மாவட்டச் செயலாளர் இகபால், தலைமை செயற்குழு உறுப்பினர் A. முகம்மது யூசுப், காஞ்சி வடக்கு மாவட்டப் பொருளாளர் யாகூப், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ஏற்கனவே, மஜக தலைமையகத்திற்கு மதமுமுக தலைமை நிர்வாகிகள் வருகை புரிந்து மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர் தைமிய்யா ஆகியோரை சந்தித்து உரையாடியது குறிப்பிடதக்கது.

– மஜக ஊடகப்பிரிவு