தஞ்சையில் மோடியின் பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான நடவடிக்கைக்கு எதிராக ஓங்கி ஒலித்த குரல்கள் (படங்கள் இணைப்பு)

கடந்த ஆண்டு இதே நாள் இரவில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார்.

அப்போது அவர் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி குவிவதை தடை செய்யவும் ஏதுவாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அதிரடியாக அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

அதன் தாக்கம் பல மாதங்கள் நீடித்தது. அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இன்று வரை எழுந்து வருகின்றன.

நாட்டின் பொருளாதார மேதைகளில் ஒருவர் என அறியப்படுகிற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆமதாபாத்தில் தொழில் அதிபர்கள் மத்தியில் நேற்று பேசும்போது, “உயர் மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை, இது திட்டமிட்ட கொள்ளை, சட்டப்படியான கொள்ளை” என மிகக்கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, முச்லிம்ச் லீக், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 18 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் அணி இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரை திமுக, முஸ்லீம் லீக் நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Close