ஜகாத் கொடுப்பதில் அதிரை மக்களின் ஆர்வம்!!!

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நான்காவது கடமையான ஜகாத்தை வாரி வழங்குவதில் அதிரை வாழ் இஸ்லாமிய மக்கள் எல்லா வருடங்களைப் போலவும் இந்த வருடமும் ஜகாத் கேட்டு வரும் உள்ளூர்
மற்றும் வெளியூர் ஏழை எளிய மக்களுக்கு இன்முகத்தோடு வாரிவழங்குகிறார்கள்.

ஜகாத்தை பெற்றுக்கொள்ளும் ஏழை எளிய மக்களும் மனநிறைவோடு அதிரை வாழ் இஸ்லமிய மக்களைப் புகழ்ந்தவாறு செல்கிறார்கள்.தஞ்சை மாவட்டத்தில் அதிகம் இஸ்லாமியர்கள் வாழும் ஊர் நமதூர்.
இங்கு உள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் வாழ்ந்து காட்டிய முறையில் நடந்து ஈமானுள்ள மனிதர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக!!! ஆமீன்.
                                                   நன்றி: jaffar bussma
Close