Adirai pirai
help தமிழகம்

அதிரை பிறையில் காணாமல் போனதாக பதிவிடப்பட்ட சிறுவன் இஜாஸ் மீட்பு..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த மைதீன் அவர்களின் மகன் முகம்மது இஜாஸ் மற்றும் இவரின் நண்பர் மாஜித் இருவரும் 07/11/17 அன்று  மாலை 5.30 மணியளவில் மயிலாடுதுறையில் இருந்து வெளியில் சென்றனர். இந்த நிலையில் இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இது குறித்து நமது அதிரை பிறையிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை பலர் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் காணாமல் போனவர் சிறுவர்களில் ஒருவரான இஜாஸ், பாண்டிச்சேரியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுவன் போலீசார் மூலம் நேற்று இரவு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

மற்றொரு சிறுவன் மாஜித் பாண்டிச்சேரியில் இருப்பதாக த்கவல் வந்ததை அடுத்து அவரின் பெற்றோர் உறவினர்கள் பாண்டிச்சேரி விரைந்துள்ளனர். தி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy