கஞ்சாவுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!

நமதூர் மார்க்க அறிவுரை அதிகளவில் போதிக்கும் ஊராக இருக்கின்றது. பல இளைஞர்கள் பள்ளியில் படிக்கும் போதே குர் ஆன் மனனம் செய்வது போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு மத்தியில் நமதூரில் சில மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் இது போன்ற அநாகாரிக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தவறான கூட்டாளிகளால் வழி மாறும் இளைஞர்கள்.

பள்ளிகளுக்கு செல்வது போல் பெற்றோரை ஏமாற்றி தவரான நண்பர்களுடன் சேர்ந்து பல தீய காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சாவில் சிக்கிய சில மாணவர்களை பிடித்த பொதுமக்கள் கண்டித்ததோடு அவர்களுடைய பெற்றோரிடமும் நிகழ்ந்ததை எடுத்துரைத்துள்ளனர்.

சிறு வயதிலேயே வழி மாறிப் போன பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி தான்? அதை அறியாத மாணவர்கள் இத்தகைய செயலில் சிக்கிக் கொள்கின்றனர்.

நல்ல இளைஞர்களும் தவறான நண்பர்களோடு சேர்வதினால் பாதை மாறும் அவலம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

பிள்ளைகளை பேணி பாதுகாப்பது பெற்றோரின் கடமையாக இருக்கின்றது.

பிள்ளைகள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம், அதே சமயம் அவர்களை சற்று கண்காணிப்பதும் மிக அவசியமாக இருக்கின்றது.

இது போன்ற தவறுகளில் இருந்து நம் மாணவர்களை பாதுகாத்திடுவோம்.

Close