Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பள்ளி சிறுவர்களுக்கு கொடிய நோய்கள் பரவும் அபாயம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் பேரூராட்சி நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சமையல் கூடத்திற்குஅருகாமையில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள்  கொட்டிவைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைகளிலிருந்து உருவாகும் ஈக்கள்,  வண்டுகள்  சமையல் கூடத்திற்குள் சென்றுவிடுகின்றன.துர்நாற்றமும் வீசுகின்றன.இதனால் மாணவர்களுக்காக தினசரி தயாராகும் உணவில் தொற்றுஏற்பட்டு கொள்ளைநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே பேரூராட்சி நிர்வாகம், கல்வித்துறையினர், பொதுசுகாதாரதுறையினர்உணவு பா துகாப்புத்துறையினர் ஆகியோர் நேரிடையாக இந்த இடத்தை பார்வையிட்டு குப்பைக்கொட்டுமிடத்தை மாற்றியமைக்கவும் தினசரி ப்ளிச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்யவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை விடுத்துள்ளனர்.