அல்லாஹ்வின் உதவியால் இரண்டாம் ஆண்டை நோக்கி பயணிக்கும் அதிரை பிறை!!!

அதிரை பிறைஅன்பிற்குரிய அதிரை பிறை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,அதிரை மக்களின் பேராதவுடன் துவங்கப்பட்ட அதிரை பிறை என்னும் இந்த இணையம் தனது இரண்டாம் ஆண்டை நோக்கி பயனிக்க துவங்கியுள்ளது.அதிரை பிறை இணையதளம் துவங்கிய சில நாட்களில் பிரபலமானது அல்ல,இது கொஞ்சம் கொஞ்சமாக அதிரை இணைய வாசகர்களின்
கவனத்தை ஈர்க்கத் துவங்கியது.அதற்க்கு அதிரை பிறையின் தோற்றம் மற்றும் அதில் பதியப்படும் விறுவிறுப்பான செய்திகள், மற்றும் தொடர்களே காரணம்.
         
இந்த இணையம் துவங்கப்பட்ட முக்கிய நோக்கம் என்னவென்றால் அதிரை மக்களுக்கு அதிரையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்கள் அறிவதற்க்கு,மக்கள் இஸ்லாமிய சட்டங்களையும் நன்மைத் தீமைகளை நங்கு அறிந்து செயல்படுத்துவதற்க்கும், மற்றும் அதிரை மக்களின் பொது சிந்தனையை அதிகரிப்பதற்க்காக மட்டுமே நடத்தப்படுகிறது.இந்த தளம் எந்த வித உள் நோக்கமும் இல்லாமல் பொதுவாக தவற்றை சுட்டிக்காட்டி ,சரியானதை மதித்து பாராட்டும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.
         
இந்த இணைய தளத்தை தனியாக துவங்கப்பட்டாலும் கவியன்பன் கலாம் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் இந்த தளத்தில் ஆசிரியராக இணைந்தது எங்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருந்தது.மேலும் அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை நியூஸ் போன்ற நம் சகோதர தளங்களின் அதரவும் மறக்க முடியாதது.அதிரை மக்களின் இந்த பேராதரவு தான் எங்களுக்கு புத்துணர்ச்சியளித்து மேலும் இந்த தளத்தை மக்களுக்கு எவ்வாறு எளிதாக காட்டுவது,பல தகவல்களை பதிவது என்று எங்களின் ஆர்வத்தை தூண்டிவிடக்கூடிய தூண்டுகோளாக இருக்கிறது.எனவே தான் மக்கள் எளிமையாக அதிரையின் அனைத்து தளங்களையும் ஒரே இணைய தளத்தில் காணும் படியாக adiraiwebsites.blogspot.com என்னும் இணைய தளத்தை உருவாக்க உறுதுனையாக இருந்ததும் உங்கள் ஆதரவால் தான்.
         
         
அதிரை பிறை இணையதளத்தின் முன்னேற்றத்திற்க்கு முக்கிய காரணமாக இருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Close