காதிர் முஹைதீன் பள்ளிக்கு இலவச மிதிவண்டி உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டன!!

கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.அதைத்தொடர்ந்து
இன்று நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வந்துள்ளன.பள்ளியில் மிதிவண்டி பொருத்தும் மெக்கானிக்குகளைக் கொண்டு மிதிவண்டி பொருத்தும் வேலை மும்முரமாக நடைப்பெற துவங்கியுள்ளது.மிதிவண்டிகள் பொருத்தப்பட்டப் பிறகு மாணவர்களுக்கு மிதிவண்டி வினியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Close