அதிரையில் SDPI கட்சியின் குப்பை தொட்டி உடைப்பு (வீடியோ இணைப்பு)

அதிரை வாய்க்கால் தெரு பள்ளி மற்றும் தக்வா பள்ளி அருகே கடந்த ஆண்டு குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இதில் பலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக வாய்க்கால் தெரு பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் மாணவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இன்று மதியம் அப்பகுதியில் குப்பைகள் அள்ளப்பட்ட போது அங்கு SDPI கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு குப்பை தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்த அகற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குப்பை கூண்டு பள்ளி அருகே உடைக்கப்பட்டிருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close