Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

சென்னையிலிருந்து வீடு திரும்பிய அதிரையருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

அதிரையில் உள்ள பலர் சென்னையில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் தங்கியுள்ளதால் பல வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த குடும்பத்தினர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை சென்னையிலிருந்து அதிரைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களின் வீட்டின் வாசல் மற்றும் கொல்லை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வீட்டில் இருந்த எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.