சவூதியில் 8 மாதத்துக்குள் 259 பேர் இஸ்லாத்தை தழுவினர் (படங்கள் இணைப்பு)

saudia islam 4இந்த வருடம் முஹர்ரம் மாதத்திலிருந்து ஸஃபான் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் சவூதி அரேபியா யன்புவில் தொழில்புரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 259 மாற்று மதங்களைச் சேர்ந்த சகோதரர்கள்
இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
யன்பு இஸ்லாமிய தஃவா வழிகாட்டல் நிலையத்தில் தொடராக கல்வி கற்றுவந்த மேற்படி சகோதரர்கள் தங்களது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டு கலிமா ஸஹாதாவை மொழிந்தமை அங்கு வாழும் அரேபிய சகோதரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
saudia islam 1saudia islam 2saudia islam 3

இலங்கை, இந்தியா, எத்தியோப்பியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சகோதரர்களே இந்நிலையத்தினூடாக இஸ்லாத்தைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

யன்பு இஸ்லாமிய தஃவா வழிகாட்டல் நிலையத்தின் பிரச்சாரப் பிரிவில் பல்வேறு மொழிகளுக்கு பொறுப்பாகவிருந்து பணியாற்றிவரும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் உப தலைவரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நஸீர்தீனின் சகோதரருமான ஹபீபுர் ரஹ்மானின் அயராத முயற்சியின் பலனாக அல்லாஹ்வின் நாட்டத்தினால் மேற்படி சகோதரர்கள் இஸ்லாத்தைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்திகள் சவூதியில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளுக்கு தன்னுடைய பொருளாதாரங்களை தாராளமாக வழங்கிவரும் சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் இலங்கையில் செயல்படும் தௌஹீத் பிரச்சார அமைப்புக்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் சமூக நிறுவனங்களின் தேவைகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Close