அதிரையில் நடைபெற்ற தமுமுக நகர பொதுக்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை தமுமுக நகர பொதுக்குழு கூட்டம் இன்று இரவு நடுத்தெருவில் நடைபெற்றது. இதில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் குறித்தும், அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமுமுக கொடி, பிளக்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக அதிரையை சேர்ந்த பயனருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் N.ஹுமாயுன் கபீர், திருச்சி மாவட்ட தமுமுக துணை செயலாளர் M.ஹுமாயுன் கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அஹமது ஹாஜா, அதிரை நகர தமுமுக தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சேக் முஹைதீன், மாவட்ட துணை செயலாளர் சேக்காதி, மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Close