Adirai pirai
posts

அதிரையில் கொட்டும் மழையையும் பார்க்காமல் நோன்பு கஞ்சி வாங்கிச் சென்ற மக்கள்

adiraipirai.blogspot.in

இன்று அஸர் தொழுகை நடந்துக்கொண்டிருக்கும் நேரம்,கிட்டத்தட்ட 4:30 மணியளவில் நமதூரில் திடீரென பலமாக மழை பெய்ய துவங்கியது.இந்த மழை ஒரு 15 நிமிடங்கள் நீடித்திருக்கும்.நோம்பு கஞ்சி வாங்கும் நேரம் என்பதால் மக்கள் கொட்டும்
மழையையும் பார்க்காமல் நீண்ட வரிசையில் நின்று நோன்பு கஞ்சியை தங்கள் இல்லங்களுக்கு வாங்கிச்சென்றனர்.

கடந்த 3 நாட்களாக இருந்த கடுமையான வெப்பத்தினால் நோன்பாளிகள் கவலை அடைந்திருந்த நிலையில்,அதிரையில் பெய்த இந்த திடீர் மழையினால்,நமதூரில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது,இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy