தமிழ் புலவர் விருது பெற்ற அதிரை கவியன்பன் கலாம்..!

அதிரை தட்டாரத் தெருவை சேர்ந்தவர் “கவியன்பன்” கலாம். கவிதை ஆக்கத்தில் வல்லவராக திகழும் இவர் பல்வேறு தலைப்புகளில் இனிமையான கவிதைகளை எழுதி வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக இவரது கவிப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

நாளிதழ்கள், வாணொளிகள் கடந்து இன்றைய காலத்து அதிரை இணையதளங்களிலும், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் இவரது கவிதைகள் ஒலித்துக்கொண்டிருகின்றன.

பல விதமான பட்டங்களையும், விருதுகளையும் தனது கவிதைகளின் மூலமாக பெற்ற இவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்க்கும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை அஜ்மானில் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டர் நடத்திய சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கவியன்பன் கலாம் அவர்களுக்கு தமிழ் புலவர் விருது வழங்கப்பட்டது.

அவருக்கு அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close